மெட்ரோ ரயிலுக்குள் பயணித்த குரங்கு

டெல்லியில் மெட்ரோ ரயிலுக்குள் ஒரு குரங்கு பயணித்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அது பற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மெட்ரோ ரயிலுக்குள் பயணித்த குரங்கு

டெல்லியில் மெட்ரோ ரயிலுக்குள் ஒரு குரங்கு பயணித்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அது பற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அக்சர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலுக்குள் புகுந்த குரங்கு பற்றி ரயில் நிலைய ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அடுத்த ரயில் நிலையத்தில் குரங்கு வெளியேற்றப்பட்டது என்று விளக்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. யமுனா பாலம் மற்றும் இந்திரபிரஸ்தாவிற்கு இடையிலான புளூ லைன் தடத்தில் குரங்கு பயணம் செய்தது தெரியவந்தது.

அதே வேளையில், குரங்கு போன்ற விலங்குகளுக்கு மெட்ரோ ரயில் பயணிகள் உணவளிப்பது போன்ற எதையும் செய்ய வேண்டாம் என்றும், அது சில வேளையில் ரயில் பயணிகளுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

https://www.youtube.com/watch?v=kME4Fsgt6oA