ஒரு லட்சம் பேரா,.? எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மோடி உருவாக்கும் முன்களப் படை.! 

ஒரு லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். 

ஒரு லட்சம் பேரா,.? எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மோடி உருவாக்கும் முன்களப் படை.! 

இந்தியாவின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, மருத்துவம் பயிலாதவர்களை மருத்துவத்துறையில் பயிற்சி அளித்து, கொரோனா முன்களப்பணியாளர்களாக ஏற்படுத்தும் நோக்கில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. 

இதற்கென பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ்  திட்டத்தின் கீழ் 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 26 மாநிலங்களில் சுமார் 111 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 6 பிரிவுகளின் கீழ் பயிற்சியளிக்கப்படவுள்ளது. அதாவது மருத்துவ சேவை, அடிப்படை மருத்துவ சேவை, மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை, அவசர கால மருத்துவ சேவை, மாதிரி சேகரிப்புக்கு உதவுவது, மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சி பெற விரும்புவோருக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இந்தநிலையில்  கிராஷ் கோர்ஸ் எனப்படும் இந்த 6 பாடப்பிரிவுகளையும் இன்று காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சுமார் ஒரு லட்சம் முன்களப்பணியாளர்களை உருவாக்கும் முயற்சியில் இத்திட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த பேரிடர் காலத்தில் சுயநலமின்றி செயலாற்றி வரும் சுகாதாரத்துறையினருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

இந்த பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவோர்,மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுவார்கள்  என கூறப்படுகிறது.