மகளின் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட மிசோரம் முதலமைச்சர்.....

மகளின் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட மிசோரம் முதலமைச்சர்.....

தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காக சென்ற மிசோரம் முதலமைச்சர் மகள் மிலாரியிடம் முன் அனுமதி வாங்கி வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அவர் முன் அனுமதி பெறாததால் மருத்துவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மிலாரி டாக்டரிடம் நேராக சென்று அவரது முகத்தில் அறைந்துள்ளார்.  அதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து மற்றொரு நபரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

பகிரங்க மன்னிப்பு:

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா பகிரங்க மன்னிப்பு கடிதம் வெளியிட்டுள்ளார்.  அக்கடிதத்தில் அவரது மனிவியும் கையொப்பமிட்டுள்ளார்.  கடிதத்தில் விளக்கமளிக்க எதுவுமில்லை எனவும் மிலாரியின் நடவடிக்கை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது எனவும் அதற்காக பொது மன்னிப்பு கேட்பதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கடிதம் வழங்கப்பட்ட பிறகும் இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.  மருத்துவர்கள் பணிகளுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க:  சிசோடியாவுக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்!!!!