நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண் மருத்துவரின் இறுதி பதிவு வைரல்..!!

ஹிமாச்சல பிரதேசத்தில் பாறைகள் உருண்டோடியதில் உயிரிழந்த இளம் பெண் மருத்துவர் இறுதியாக செய்த டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண் மருத்துவரின் இறுதி பதிவு வைரல்..!!

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் சுற்றுலா பயணிகள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஆயுர்வேத மருத்துவர் தீபா ஷர்மாவும் ஒருவர். இந்த நிலையில் தீபா ஷர்மா உயிரிழப்பதற்கு முன் அவர் டுவிட்டரில் பதிவிட்ட பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் தனது புகைப்படங்களுடன் இயற்கை அன்னையின்றி வாழ்க்கை ஒன்றுமில்லை எனவும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் கடைசி எல்லையில் நிற்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது.