தோற்றம் பற்றி நாங்கள் பேசமாட்டோம்...ஆனால் அமைச்சரின் தோற்றம் குறித்த கேள்வி...வைரலாகும் வீடியோ!

தோற்றம் பற்றி நாங்கள் பேசமாட்டோம்...ஆனால் அமைச்சரின் தோற்றம் குறித்த கேள்வி...வைரலாகும் வீடியோ!

குடியரசு தலைவரின் தோற்றம் குறித்து கேலி செய்து பேசிய மேற்கு வங்க அமைச்சரின் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான அகில் கிரி பேச்சு:

மேற்கு வங்க மாநிலம், நந்திகிராம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மேற்குவங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான அகில் கிரி பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

சர்ச்சையான பேச்சு:

அப்போது பேசிய அவர், நாங்கள் யாரையும் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதில்லை, ஆனால் நமது குடியரசுத் தலைவர் பார்க்க எப்படி இருக்கிறார் என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.

கண்டனம் தெரிவிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்:

இதுத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பல்வேறு தரப்பினர் அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தங்களுடைய அதிகாரப் பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், அகில் கிரி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, "பெண்கள் அதிகாரம் பெறும் சகாப்தத்தில், பெண்ணிற்கு எதிரான இதுபோன்ற வெறுப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் தெரிவித்துள்ளது. குடியரசு தலைவர் குறித்து கேள்வி எழுப்பி பேசிய அகில் கிரிக்கு சொந்த கட்சியிலிருந்தே கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.