பெண்களின் கண்ணியத்தை குறைப்பதா? மத்திய அரசு ஒரு போதும் துணை நிற்காது!!

பெண்களின் கண்ணியத்தை குறைப்பதா? மத்திய அரசு ஒரு போதும் துணை நிற்காது!!

பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் எந்த வகையான செயல்பாடுகளையும் மத்திய அரசு பொறுத்துக்கொள்ளாது என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தி காட்டியதாக சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய புல்லி பாய், சல்லி டீல்ஸ் செயலிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி சுஷில் மோடி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்னவ், பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பதே இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு என குறிப்பிட்ட அவர், இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.