இன்று முதல் மெட்ரோ ரயில் இயக்கம்!

இன்று முதல் மெட்ரோ ரயில் இயக்கம்!

டெல்லியில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு அமல்... மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கத் தொடங்கின.

டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள காசியாபாத், நொய்டா ஆகிய நகரங்களில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மால்கள் கடைகள் யாவும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை முறை வைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று முதல் மெட்ரோ சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. 50 சதவீத இருக்கை வசதியுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஸ்மார்ட் கார்டு, மற்றும் ரயில் நிலையங்களில் வாங்கும் டோக்கன் என இருவகைப் பயணிகளும் இதில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.