கார் வாங்கும் கனவு பலிக்குமா? உயரும் மாருதி சுசூகி கார்களின் விலை....

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ அதன் வாகனங்களின் விலையை, அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கார் வாங்கும் கனவு பலிக்குமா?  உயரும் மாருதி சுசூகி கார்களின் விலை....

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ அதன் வாகனங்களின் விலையை, அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான உள்ளீட்டு விலை மிகவும் அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்பின் ஒரு பகுதியை, வாடிக்கையாளர்களுக்கு விலையை ஏற்றுவதின் வாயிலாக சமாளிக்க முடிவு செய்துள்ளது.மாடல்கள்நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக, ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. இருப்பினும், எந்த அளவுக்கு விலையை அதிகரிக்க இருக்கிறது என்பது குறித்து, எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், மாடல்களை பொறுத்து, விலை உயர்வு நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.