இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டிணண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்

இந்திய ராணுவத்தின் தற்போதைய தளபதியாக உள்ள எம்.எம் நரவனே ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் புதிய ராணுவத் தளபதியாக லெப்டிணண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராணுவ உயரதிகாரிகளுக்கான மாநாடு துவங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது கிழக்கு பிராந்திய காமாண்டராக இருக்கும் மனோஜ் பாண்டே, சீன இந்தியா எல்லையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி கண்காணிக்கும் வசதியை எளிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவர்.

இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவு தலைவர் ஒருவர் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவதே முதல்முறையாகும்.