ஹிஜாப் சர்ச்சை.. பெண்ணுரிமை போராளி மலாலா ஆதரவு.. கேள்வி கேட்ட சி.டி.ரவி

கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற பெண்ணுரிமை போராளி மலாலா களமிறங்கிய நிலையில் பாஜக எம்எல்ஏவும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்து வரும் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாகவும் ஹிஜாப் தடைக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற பெண்ணுரிமை போராளி மலாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் இஸ்லாமிய மாணவிகள் ஒடுக்கப்படுவதை இந்திய அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் இவர் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.