சிகரெட் பஞ்சுகளில் இருந்து பொம்மை தயாரிப்பு.. அதிரடி காட்டும் இளைஞர்..!

சிகரெட் பஞ்சுகளில் இருந்து பொம்மை தயாரிப்பு.. அதிரடி காட்டும் இளைஞர்..!

பொம்மைகள்:

முன்பெல்லாம் சிறுவர்கள் தான் கையில் எந்நேரமும் பொம்மைகள் வைத்து விளையாடுவர். ஆனால் இன்று இளம் பெண்கள் கரடி பொம்மை இன்றி இருப்பது கடினம் தான். உறங்கும் போதும் தங்களது மெத்தைகளில் பல வகையான பொம்மைகள் இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு இளம் பெண்கள் வந்துள்ளனர். 

பல வகைகளில்:

இதற்காக பல வண்ணங்களில், பல வடிவங்களில் பஞ்சுகளால் கொண்டு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலை முதல் ஆயிரம், லட்சம் ரூபாய் வரை பொம்மைகள் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. 

சிகரெட் துண்டில் இருந்து பொம்மைகள்:

சிலர் குப்பைகள் என தூக்கி எறியப்படும் பொருட்களை கொண்டு சிற்பங்களை செய்து அசத்துவர். அந்த வகையில் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தூக்கி எறியப்படும் சிகரெட் துண்டின் கடைசி பாகத்தை கொண்டு பொம்மைகளை தயாரித்து வருகிறார். 

இளம் வயது தொழிலதிபர்:

டெல்லியை சேர்ந்த நமன் குப்தா என்கிற தொழிலதிபர் பயன்படுத்தப்பட்ட சிகரெட்டுக்குப் பின்புறம் உள்ள பஞ்சினை கொண்டு பொம்மைகளை தயாரித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

சுகாதாரமான முறையில் பொம்மைகள்:

மெது மெதுவாக இவரது தொழிலை கண்டு வியந்த பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இவரை பின்தொடர்ந்து பொம்மைகளை தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். நொய்டா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களின் ஆயிரம் கிலோவுக்கு மேல் சேகரமாகும் சிகரெட் குப்பைகளைக் கொண்டு சுகாதாரமான முறையில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.