மகாராஷ்டிரா: விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவில் கொட்டித் தீர்த்த கனமழை..!

கொட்டும் மழையில், நீர் நிலையில் கரைய வேண்டிய சிலைகள் சாலையிலேயே கரைந்தது..!

மகாராஷ்டிரா: விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவில் கொட்டித் தீர்த்த கனமழை..!

விநாயகர் சதுர்த்தி:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ம் தேதி கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. வீடுகள் மற்றும் வீதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு 3 அல்லது 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வந்தது. 

வட மாநிலங்களில் கொண்டாட்டம்:

தென் மாநிலங்களை காட்டிலும், வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வித்தியாச வித்தியாசமாக விநாயகர் சிலைகளை பல வடிவங்களில் வைத்து வழிபடுவர். அதனை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து மகிழ்வர். 

10 நாட்கள் கொண்டாட்டம்:

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக களைக்கட்டியது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம். ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. 

கனமழை:

அப்படி தானேவில் நடைபெற்று வந்த பூஜைகள் முடிந்து நேற்று நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்காக எடுத்து செல்லும் போது, அங்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் விழாவை கொண்டாட முடியாமல் மக்கள் சிரமம் அடைந்தனர்.