திரும்ப விரும்பும் எம்.எல்.ஏ-கள் தாராளமாக திரும்பலாம் : கதவுகள் திறந்தே இருக்கும் - ஆதித்தியா தாக்கரே தெரிவிப்பு!

திரும்ப விரும்பும் எம்.எல்.ஏ-கள் தாராளமாக திரும்பலாம் : கதவுகள் திறந்தே இருக்கும் - ஆதித்தியா தாக்கரே தெரிவிப்பு!

கவுஹாத்தியில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-களில் யாரேனும் திரும்ப விரும்பினால் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என ஆதித்தியா தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான,  சிவசேனா எம்.எல்.ஏ. க்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது, மகாராஷ்டிர சட்டசபை துணை சபாநாயகர், மகாராஷ்டிர மாநில சட்டமன்ற செயலாளர் உள்பட பலருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இவ்வழக்கின் விசாரணை ஜுலை 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இரு தரப்பும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் கவுஹாத்தியில் ஷிண்டே தலைமையில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-களில் யாரேனும் மீண்டும் உத்தவ் தாக்கரேவிடம் திரும்ப விரும்பினால் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக அமைச்சர் ஆதித்தியா தாக்கரே தெரிவித்துள்ளார்.