ஆகர் படேலுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து.. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ மனு!!

அம்னெஸ்டி இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகர் படேலுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகர் படேலுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து.. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ மனு!!

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா மனித உரிமைகள் அமைப்பின் தலைவரான ஆகார் படேல், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்தபோது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அப்போது அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் இருப்பதாக கூறி அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். தான் சிபிஐ கண்காணிப்பில் இருப்பதை சற்றும் எதிர்பாராத ஆகர் படேல் தனது எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார்.

நீதிமன்றம் ஆகர் படேலுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ஆகர் படேலுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸை ரத்து செய்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.