பாமக ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகள் அகற்றப்படும் - ராமதாஸ்!!

பாமக ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகள் அகற்றப்படும் -  ராமதாஸ்!!

புதுச்சேரி மாநிலத்தில் பாமக ஆட்சிக்கு வந்த உடன் மதுக்கடைகள் அகற்றப்படும் என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக் கூட்டம் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், போகாத இடம் இல்லை, ஏறாத மாடிகள் இல்லை ஆனாலும் பாமக அட்சியை பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

கஞ்சாவை ஒழிக்க தீர்மானம்  நிறைவேற்றினால் மட்டும் போதாது என்ற அவர், மாதம் ஒரு முறை கஞ்சாவுக்கு எதிராக பாமக சார்பில் போராட்டம் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் அகற்றல்  உள்ளிட்ட 7 முக்கிய தீர்மானங்கள் 1 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் எனவும் ராமதாஸ் உறுதி அளித்தார்.