கவனக்குறைவால் உயிரிழந்த சிங்கங்கள்....கவனிக்குமா வனத்துறை?!!!

கவனக்குறைவால் உயிரிழந்த சிங்கங்கள்....கவனிக்குமா வனத்துறை?!!!

கோட்டா கிராமத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் சிங்கமும், சிங்க குட்டியும் தவறி விழுந்தன. இதுகுறித்து விவசாயி ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

திறந்தவெளி கிணறு:

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கிர் வனப் பிரிவில் உள்ள கிணற்றில் விழுந்து சிங்கமும், சிங்க குட்டியும் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இரண்டும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

காரணம் என்ன?:

இதுகுறித்து வனத்துறை துணைப் பாதுகாவலர் கூறும்போது கம்பா தாலுகா கோட்டா கிராமத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் சிங்கமும், சிங்க குட்டியும் தவறி விழுந்தன எனவும் இதுகுறித்து விவசாயி வனத்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.  வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, ​​இரண்டும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிங்கங்களின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஜப்பானில்.....