இந்தியாவின் 'குட்டி பிரான்ஸ்' : புதுச்சேரியின் விடுதலை நாள் ..!

இந்தியாவின் 'குட்டி பிரான்ஸ்' :  புதுச்சேரியின் விடுதலை நாள் ..!

இந்தியாவின் குட்டி பிரான்ஸ் என அழைக்கப்படும் புதுச்சேரியின் விடுதலை நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி விடுதலை பெற்ற கதையைப் பார்க்கலாம்..

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள அழகிய சுற்றுலா நகரம்தான் புதுச்சேரி. இந்தியாவின் யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரி, இந்தியா விடுதலை பெற்று 7 ஆண்டுகள் கழித்து 1957-ல் தான் விடுதலை பெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி கூடுகிறது | The  Puducherry Legislative Assembly on Sep.20th - hindutamil.in

1673-ம் ஆண்டு இந்தியாவில் ராஜ்ஜியத்தை நிறுவ, பிரெஞ்சு மக்கள் புதுச்சேரியில் காலூன்றிய இடத்தில் இருந்து, அதன் விடுதலைக்கான கதை தொடங்குகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் 236 ஆண்டுகள் இருந்தது  புதுச்சேரி. 

Pondicherry - Alchetron, The Free Social Encyclopedia

1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் விடுதலை அளித்தனர். ஆனாலும் புதுச்சேரி மட்டும் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் கொதித்தெழுந்த புதுச்சேரி வாழ் இந்தியர்கள், பிரெஞ்சுக்காரர்களும் நாட்டை விட்டு  வெளியேற வேண்டும் என்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

French Colony In Pondicherry - An Ultimate Walking Guide

புதுச்சேரி பிரஞ்சு - இந்திய போராட்ட வீரர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பது தொடர்பான வாக்கெடுப்பு 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ம் தேதி நடைபெற்றது. இதில், 170 வாக்குகள் பெற்ற ஆதரவுடன் நவம்பர் 1-ம் தேதி பிரெஞ்சு மற்றும் இந்திய அரசாங்கம் உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுதிட்டப்பட்டு, நவம்பர் 1-ம் தேதி விடுதலை நாள் என்று அறிவிக்கப்பட்டது.  

இந்த இடம் மட்டும் இல்லையென்றால் நாம் விசா இல்லாமல் புதுச்சேரிக்குள் நுழைய  முடியாது! | This place is the reason why Pondicherry is united with India –  otherwise we should require ...

ஆனால் ஏழத்தாழ எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய பிரஞ்சு நாடாளுமன்றங்கள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தன. அதன் அடிப்படையில் 1962 ஆகஸ்ட் 16 அன்று அதிகாரப்பூரவமாக இணைந்தன. இதனால் 2014 வரை ஆகஸ்ட் 16-ம் தேதிதான் புதுச்சேரியின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

History of Puducherry, Colonial History of Puducherry, Timeline

இதற்கும் எதிர்ப்பு வந்த நிலையில், 2014-ல் சுதந்திர தினத்தின் வரலாறு குறித்து முறையான ஆய்வு நடத்தப்பட்டு, நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியின் விடுதலை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த தினம்தான் இன்று! 

இதையும் படிக்க  | “ சனாதன விவகாரத்தை அரசியலாக்குவதா? ” - உதயநிதி ஸ்டாலின்