தேசத்திற்கான கனவை உண்மையாக்க...பிரதமர் மோடி சொன்னது என்ன?

தேசத்திற்கான கனவை உண்மையாக்க...பிரதமர் மோடி சொன்னது என்ன?
Published on
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடி குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குங்கள் :

நாட்டின் 74ம் குடியரசு தினம் இன்று கொண்டாட்டப்படும் நிலையில், பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இந்த நன்நாளை கடைபிடிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒற்றுமையுடன் முன்னேறி விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நனவாக்குவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் வேகமாக முன்னேறுவதாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இதேபோல்  பல்வேறு உலக நாடுகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன. 

உலகத் தலைவர்களின் வாழ்த்துகள் :

செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை கொண்டாடும் வகையில், இந்திய நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக இஸ்ரேல் தூதரகம் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நவீன இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் சாதனைகளை கவுரவிக்கும் தினமாக அமைந்துள்ள இந்நாளில், அன்பையும் நம்பிக்கையையும் பகிர்ந்துகொள்வதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி ஆல்பனிஸ் தெரிவித்துள்ளார். 

இந்திய அரசியலமைப்பின் வெற்றி, பல்வேறு நாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பால் உயர்ந்துள்ள இந்தியாவை வாழ்த்துவதாகவும் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து, பல்வேறு உலக நாடுகள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com