மேற்குவங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மம்தாவை நியமிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...

மேற்குவங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மம்தா பேனர்ஜியை நியமிப்பது தொடர்பான சட்டத்திருத்தத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேற்குவங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மம்தாவை நியமிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...

மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜக்தீப் தன்கர், பல்கலைக்கழக வேந்தராக இருந்து அதன் நிர்வாக பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

இதனால் துணைவேந்தர்கள் நியமனம் செய்வது தொடர்பாக ஆளுநருக்கும் மம்தா அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிப்பதோடு, மாநில அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநில பல்கலைக்கழகங்கள் மீது ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தை முதலமைச்சருக்கு மாற்றுவது குறித்து நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு கூட்டத்தில் தெரிவித்த நிலையில், இறுதியில் மம்தாவை பல்கலைக்கழங்களின் வேந்தராக ஆக்குவதற்கு சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.