’மத்தி’க்கு ஆட்டம் காட்டும் மேற்குவங்கத்தின் ’தல’

’மத்தி’க்கு ஆட்டம் காட்டும் மேற்குவங்கத்தின் ’தல’

டெல்லி செல்ல அழைப்பு விடுத்தும், அதனை நிராகரித்த மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமை செயலருக்கு  மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசுக்கும், மம்தா அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் யாஸ் புயல் பாதிப்பு தொடர்பான கூட்டத்தில் மம்தா பங்கேற்காததை தொடர்ந்து, அம்மாநில தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா உடனடியாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

ஆனால் அவர் தொடர்ந்து மாநில பணிகளில் ஈடுபட்டதோடு, பணி நீட்டிப்பு ஆணையை ஏற்காது விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர் உடனடியாக மம்தாவின் முக்கிய ஆலோசகராகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் யாஸ் புயல் பாதிப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்காத பந்தோபத்யாவுக்கு மத்திய அரசு நேற்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட இந்த நோட்டீஸுக்கு 3 நாட்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.