நிலச்சரிவால் இடிந்து தரைமட்டமான ஓட்டல்... 

உத்தரகாண்டில் நிலச்சரிவால்,  ஓட்டல் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமான வீடியோ வெளியாகியுள்ளது.

நிலச்சரிவால் இடிந்து தரைமட்டமான ஓட்டல்... 

உத்தரகாண்டில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக பத்ரிநாத் நெடுஞ்சாலை பகுதி  வழியாக Tapovan-Vishnugad நீர்மின் நிலையம் சுரங்கப்பாதையில் விரிசல் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று அந்த பாதையில் இருந்த சொகுசு ஓட்டல் திடீரென குன்று நோக்கி இடிந்து விழுந்தது.

முன்னதாக இந்த ஓட்டலில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்தோர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் இதனால் உயிரிழப்பு எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.