ராமர் கோவில் அறக்கட்டளை மீது நில மோசடிப் புகார்.... சிபிஐ விசாரணை..?

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் நில மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமர் கோவில் அறக்கட்டளை மீது நில மோசடிப் புகார்.... சிபிஐ விசாரணை..?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளை கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோவில் கட்டுமான பணி ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வளாகத்தில் சுற்றளவை  விரிவாக்கம் செய்வதற்காக கூடுதல் நிலம் விலை கொடுத்து வாங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு நிலம் வாங்கிய விவகாரத்தில் சுமார் 16 கோடி ரூபாய் அளவுக்கு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக உத்திர பிரதேசத்தின் எதிர்கட்சிகளான சமாஜ்வாடி கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நபர் ஒருவரிடம் இருந்து 2 கோடி ரூபாய்க்கு இடம் வாங்கி அதனை சில நிமிடங்களில் 18 கோடி ரூபாய்க்கு ராம் கோயில் அறக்கட்டளைக்கு அதன் உறுப்பினர்கள் விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான சிபிஐ விசாரணை தேவை எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.