6 ஆண்டுகளுக்கு பிறகு சோனியாவை சந்திக்கும் லாலு, நிதிஷ்.. பாஜகவுக்கு எதிராக கிளம்புகிறார்களா?

பீகாரில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார், சமீபத்தில் விலகி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதலமைச்சர் ஆனார்..!

6 ஆண்டுகளுக்கு பிறகு சோனியாவை சந்திக்கும் லாலு, நிதிஷ்.. பாஜகவுக்கு எதிராக கிளம்புகிறார்களா?

சோனியாவை சந்திக்கும் தலைவர்கள்:

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் 
இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று மாலை சந்தித்து பேச உள்ளனர். 

பாஜகவுக்கு எதிராக:

தேசிய அளவில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 

பாஜகவிலிருந்து விலகிய நிதிஷ்குமார்:

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், பா.ஜ.க.வில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மீண்டும் முதலமைச்சரானார். 

சோனியாவை சந்திக்கும் லாலு, நிதிஷ்:

இதனையடுத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் அவர் தீவிரம் காட்டி வரும் நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து, காங்கிரஸ் இடைக் காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் இன்று சந்தித்து பேச உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.