எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்த பாடம் முக்கியம்... மத்திய அமைச்சரின் அறிவிப்பு...

ஆயுர்வேதம் மற்றும் யோகா அடிப்படையிலான பாடத்திட்டத்தை பள்ளி கல்வியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்த பாடம் முக்கியம்... மத்திய அமைச்சரின் அறிவிப்பு...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக கேள்விக்கு பதிலளித்த மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால்; மழலையர் வகுப்புகள் உள்பட 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வியில் இந்த பாடத்திட்டத்தை சேர்க்கும் வரைவு பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைத்துள்ள தேசிய கல்விக் கொள்கை செயல்பாட்டுக் குழுவில் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 19ந்தேதி நடைபெற்றது. இக்கூகூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான ஆயுஷ் அமைச்சகத்தின் நடவடிக்கை அறிக்கை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் பாலரக்ஷா கிட் என்பதை உருவாக்கியுள்ளது. பொதுவான தொற்றுகளிலிருந்து குழந்தைகளை இது காக்கும். இந்த தொகுப்பில் மருத்துவ குணம் கொண்ட திரவ மருந்துகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். மத்திய அரசின் இந்தியன் மெடிசின்ஸ் பார்மசுட்டிகள் கார்ப்பரேஷன் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது என கூறினார்.

மேலும் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் (என்ஐஏ) நிபுணர்கள் குழு, டி-நோவோ பிரிவின் கீழ் உள்ள பல்கலைக்கழகமாக கருதப்படும் பள்ளி மாணவர்களுக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் அடிப்படையில் நர்சரி, எல்கேஜி மற்றும் யுகேஜி உட்பட 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின் வரைவை உருவாக்கியுள்ளது என்றார்.