கிருஷ்ண ஜெயந்தி விழா : மதுராவில் குவிந்த பக்தர்கள் !!

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படும் மதுராவில், பக்தர்களின் ஆட்டம் பாட்டம் என விழா களைகட்டியுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி விழா : மதுராவில் குவிந்த பக்தர்கள் !!

கிருஷ்ண ஜெயந்தி

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதி அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் மதுராவில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அங்குள்ள கிருஷ்ணர் கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. இரவு முதலே மதுராவில் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று பக்தி பாடல்களை பாடியும் ஆடியும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

தலைவர்கள் வாழ்த்து

இதனிடயே, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக ஆளுநனர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் உலகின் வழிகாட்டியாகப் பரிணமிக்கவுள்ள நம் தேசத்தின் விழுமிய இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு, நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போம் என்று தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கீதையில் கண்ணன் உரைத்த உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ணஜெயந்தி நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா மற்றும்  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.