புஷ்பா பட பாணியில் நடந்த கடத்தல் சம்பவம்...! ஐந்து பேர் கைது..!

செம்மர கட்டைகளை கடத்த முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஐந்து கூலி தொழிலாளர்கள் கைது.13 செம்மரக்கட்டைகள், ஒரு கார் பறிமுதல்.

புஷ்பா பட பாணியில் நடந்த கடத்தல் சம்பவம்...! ஐந்து பேர் கைது..!

ஆந்திர மாநிலம் திருப்பதி  அருகே, சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த ஐந்து கூலி தொழிலாளர்கள் போலீஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். 

செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கம்போல் சேஷாசலம் வன பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது செம்மரங்களை  கார் ஒன்றில் சிலர் கடத்திக் கொண்டிருப்பதை பார்த்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செம்மர கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 13 செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குமார், பெருமாள், பழனிவேல், கோபிநாத் மற்றும் சிவா என்பது தெரியவந்தது.