டிரெக்கிங் சென்று மலை முகட்டில் சிக்கி கொண்ட இளைஞர்... மீட்கும் பணிகள் தீவிரம்

கேரளாவில் டிரக்கிங்க் சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்ததில் செங்குத்து குகைக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்க ராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேரட்டை பகுதியைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் குரும்பாச்சி மலைக்கு டிரக்கிங் சென்றுள்ளார். அப்போது கால் இடறி தவறி விழுந்ததில் செங்குத்து மலையில் உள்ள குகை ஒன்றில் சிக்கிக் கொண்டார்.

இதனையடுத்து தீயனைப்பு துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க முயற்சித்து தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இந்திய ராணுவத்தின் உதவியை கோரியுள்ளார். தற்போது இளைஞர் மலையின் உச்சியில் சிக்கியுள்ள காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.