டூவீலரில் வந்தவர் மேல் ஏறி இறங்கிய கேரள பஸ் : பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில்  விளையூர் பகுதியில் வைத்து கேரளா பஸ் ஒன்று இரு சக்கர வாகன ஓட்டியின்  மேல் ஏறி இறங்கியுள்ளது. இந்த விபத்தின் CCTV  காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

டூவீலரில் வந்தவர் மேல் ஏறி இறங்கிய கேரள பஸ் : பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

திருவனந்தபுரத்தில் இருந்து தாமரசேரி செல்லும் சாலை வழியாக கேரளா பேருந்து ஒன்று நேற்றைய தினம் இரவு 8 மணி அளவில் விளையூர்  பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது முன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை பேருந்து முந்த முயன்றுள்ளது. இதில் இடதுபுறம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி இரு சக்கர வாகன ஒட்டியின்  மேல் பேருந்தின் பின் பக்க சக்கரம் ஏறி இறங்கி இந்த விபத்து ஏற்படுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் பேருந்து கவனக்குறைவாக முந்தி சென்றதால் தான் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதில் விபத்துக்குள்ளான இரு சக்கர வாகன ஓட்டி மலப்புரம் கொளத்தூரைச் சேர்ந்த   சதீஷ்குமார்  என்பது தெரிய வந்துள்ளது . இவர்  தலையில் பலத்த காயத்துடன் பெரிந்தல்பண்ணா பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  காயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து பேருந்து உட்பட பேருந்தை  ஓட்டிய ஓட்டுனர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.