பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு மாறாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் திங்கள்கிழமை காலை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்.
ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்யுமாறு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டதையடுத்து மாநிலத்தில் அரசியல் சூடுபிடித்துள்ளது.
ஆளும் இடது ஜனநாயக நிதியம் (எல்டிஎஃப்) பல போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், ஆளுநரின் உத்தரவு மிகமோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று மாநில கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு மாறாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் திங்கள்கிழமை காலை ராஜினாமா செய்யுமாறு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆளுநர் மீது கடும் கோபம் கொண்ட கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து,ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ”இந்தியாவில் கடந்த கால வரலாற்றில் எந்த ஆளுநராவது இப்படி செய்துள்ளனரா? இதை அரசாங்க நடவடிக்கைகளில் தலையிடும் முயற்சியாகவே பார்க்க முடியும். ஆளுநரின் இந்த நடவடிக்கையால் நமது பல்கலைகழகங்கள் அசாதாரண சாதனைகளை செய்தும் அரசின் மீதான நல்ல கருத்துகள் மாறி வருகிறது.” என்று கூறியுள்ளார்.