கேரள காங்கிரஸ் தலைவர் பிசி ஜார்ஜ் கைது.. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு!!

மாநாடு ஒன்றில் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதற்காக கேரள காங்கிரஸ் தலைவர் பிசி ஜார்ஜை போலீசார் கைது செய்தனர்.

கேரள காங்கிரஸ் தலைவர் பிசி ஜார்ஜ் கைது.. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு!!

அனந்தபுரி இந்து மகா சம்மேளனத்தில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் பிசி ஜார்ஜ், உணவங்களில் சிறுபான்மை சமூகத்தினர் வேண்டும் என்றே குழந்தையின்மைக்கான மருந்துகளை குளிர் பானங்களில் கலந்து தருவதாகவும், அவர்கள் மக்கள் தொகையை அதிகரித்து நாட்டை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு வெளியே உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற எடுத்த முடிவை அவர் பாராட்டினார்.

மேலும், தான் வெவ்வேறு மதங்களுக்கு இடையிலான திருமணத்திற்கு எதிரானவன் அல்ல, ஆனால் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடைபெறும் திருமணத்திற்கு எதிரானவன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுத்தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபியிடம் பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து மாநில காவல்துறை தலைவர் அனில் காந்த் உத்தரவின் பேரில்  போலீசார் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து ஜாமினில் வெளியே வர முடியாதபடி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து தற்போது  கேரள காங்கிரஸ் தலைவர் பிசி ஜார்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.