தமிழக லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் : லஞ்சம் கேட்டு கர்நாடக போலீஸ் அட்டூழியம் !!

லஞ்சம் கேட்டு தமிழக லாரி ஓட்டுநரை மிரட்டி தாக்குதல் நடத்தும் கர்நாடக போலீஸ்.

தமிழக லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் : லஞ்சம் கேட்டு கர்நாடக போலீஸ் அட்டூழியம் !!

தமிழகத்திலிருந்து சரக்கு லாரி ஒன்று நேற்று சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது ரோந்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் சிலர் லாரியை நிறுத்தி ஆவணங்களை கொடுக்க வலியுறுத்தினர். லஞ்சம் கேட்கும் நோக்கத்தோடு லாரியை காவல்துறை அதிகாரிகள் நிறுத்திய போது ஓட்டுநரை மிரட்டிய அவர்கள் ஓட்டுநரின் உதவியாளர் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் முதலில் சாப்பிடுவதை நிறுத்து உனது சீருடை எங்கே இது திருட்டு லாரி ஆகையால் லாரி வாங்கிய ரசீது வேண்டும் என அத்துமீறி நடந்து கொண்டனர்.

இதை ஓட்டுநர் முழுவதுமாக தனது கைபேசியில் படம் பிடித்த நிலையில் படம் பிடிப்பதை நிறுத்து என்று ஓட்டுநர் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தினர்.  ஹிரியூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை அதிகாரிகள் குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த லாரிகளை குறிவைத்து லஞ்சம் பெறுவதற்கு தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சண்முகப்பா குற்றம் சாட்டியுள்ளார். லாரி ஓட்டுனரிடம் அத்துமீறி நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பலமுறை நாங்கள் புகார் தெரிவித்தும் தொடர்ந்து ஹிரியூர் காவல்துறை அதிகாரிகள் லாரி ஓட்டுனர்களை தாக்குவதும் அத்துமீறி நடந்து கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் குறைந்தது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வசூலித்து வருகிறார்கள் இவர்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் லாரி டிரைவரை துன்புறுத்தி ஆவணங்கள் கேட்பது எவ்வாறு சரி. லஞ்சம் பூலல் இங்கு பெரிய விட்டது உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்