5ஜி சேவையை எதிர்த்து ஜூஹி சாவ்லா வழக்கு....டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம்

5ஜி சேவையை எதிர்த்து பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

5ஜி சேவையை எதிர்த்து ஜூஹி சாவ்லா வழக்கு....டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம்

5ஜி சேவையானது மக்கள் மீது கடுமையான, மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறி நடிகை ஜூஹி சாவ்லா சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி ஜே.ஆர்.மிதா, மனுதாரர் முதலில் அரசிடம் இதுதொடர்பாக அணுகியிருக்க வேண்டும், அதில் தீர்வு கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் நீதிமன்றத்தை நாட வேண்டும் என கூறி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இதனிடையே நீதிமன்ற விசாரணைக்கான இணைப்பை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ஜூஹி பகிர்ந்ததை தொடர்ந்து, வழக்கு விசாரணையில் குறுக்கிட்டு விஷம வேலைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.