பயணிகளை குறிவைத்து உள்நாட்டு விமான போக்குவரத்தில் இரு வித கட்டண சேவையை அமல்படுத்தும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்

உள்நாட்டு விமான போக்குவரத்தில், இரண்டு விதமான கட்டண சேவையை அறிமுகப்படுத்தி பயணிகளை ஈர்க்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பயணிகளை குறிவைத்து உள்நாட்டு விமான போக்குவரத்தில் இரு வித கட்டண சேவையை அமல்படுத்தும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்

ஏர் இந்தியாவை போல் கடும் நிதி நெருக்கடியால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், மீண்டும் விமான சேவையை தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் பயணிகளை ஈர்க்கும் விதமாக முழுவதும்  விமான பணிப்பெண்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை புகுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் வேறு எந்த உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களும் வழங்காத   இரட்டை கட்டண சேவையை வழங்க முடிவு செய்துள்ள நிறுவனம், பிஸினஸ் கிளாஸ் பிரிவு பயணிகளுக்கு இலவச உணவுடன் பயண சேவையும், எக்னாமிக் கிளாஸ் பிரிவு பயணிககளுக்கு கட்டணத்துடன் உணவையும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.