ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய கமாண்டர் சுட்டுக்கொலை - காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய கமாண்டரான ஷமிம் சோபி அகா ஷாம் சோபி கொல்லப்பட்டுள்ளார்.

டிரால் பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய கமாண்டரான ஷமிம் சோபி அகா ஷாம் சோபி கொல்லப்பட்டதாக, காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறியுள்ளார்.

2004-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஷமிம், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அதன் பிறகு வெளியே வந்து மீண்டும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், ஐ.ஜி. விஜய் குமார் கூறியுள்ளார்.