நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர் : ஜக்தீப் தன்கர் இன்று பதவி ஏற்கிறார் !!

நாட்டின் 14வது குடியரசு துணை தலைவராக, மேற்குவங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் இன்று பதவி ஏற்கிறார்.

நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர்  : ஜக்தீப் தன்கர் இன்று பதவி ஏற்கிறார் !!

துணைக் குடியரசுத் தலைவர்

நாட்டின் 14வது குடியரசு துணை தலைவராக, மேற்குவங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் இன்று பதவி ஏற்கிறார். இந்தியாவின் 13வது குடியரசு துணை தலைவராக இருந்த ஆந்திராவை சேர்ந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனை முன்னிட்டு புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 

ஜெக்தீப் தன்கர்

இதில் எதிர்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான ஜெக்தீப் தன்கர், 346 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மையை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இன்று பதவியேற்பு

இந்தநிலையில் நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் இன்று பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியானது குடியரசு தலைவர் மாளிகையில், மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று தன்கருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.