விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ்... நாட்டைவிட்டு வெளியேற தடை...

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்ற அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ்... நாட்டைவிட்டு வெளியேற தடை...

200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், சுகேஷ் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜாக்குலின் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், துபாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நடிகை ஜாக்குலின் மும்பை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது, விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். சிறிது நேர விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என, ஜாக்குலினுக்கு புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.