அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியம் மிக்க பூமியை விட்டு செல்வது நமது கடமை - பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதிகள் இந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி ஐ.நா சபை  கூட்டத்தில் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியம் மிக்க பூமியை விட்டு செல்வது நமது கடமை - பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதிகள் இந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி ஐ.நா சபை  கூட்டத்தில் தெரிவித்தார்.

பாலைவனமாக்கல், நிலங்கள் சீரழிதல் மற்றும் வறட்சி குறித்து ஐ.நா., உயர்நிலை கூட்டத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் 10 ஆண்டுகளில், 30 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதிகள் இந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் வாயிலாக நாட்டின் மொத்த பரப்பளவில் வனப்பகுதியின் பங்கு, நான்கில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது என்றும்  நிலங்கள் அழிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

நிலங்கள் அழிக்கப்படுவதையும், அதன் வளங்கள் சுரண்டப்படுவதையும் நாம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சாதிக்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர்  நிலங்கள் அழிக்கப்படுவது குறித்து சர்வதேச சமூகத்தின் முறையிடுவது பற்றி இந்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருவதாகவும் கூறினார். இந்தியாவில், எப்போதும் நிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். என்றும் புனித பூமியை எங்கள் தாயாக கருதுகிறோம் என்றும் கூறிய பிரதமர் மோடி நிலங்கள் அழிக்கப்படுவது வளரும் நாடுகளுக்கு ஒரு சிறப்பு சவாலாக உள்ளது என தெரிவித்தார். நில மறுசீரமைப்பு உத்திகளை உருவாக்க சக வளரும் நாடுகளுக்கு இந்தியா உதவுகிறது. என்றும் நில சீரழிவு பிரச்சினைகள் குறித்த அறிவியல் அணுகுமுறையை மேம்படுத் துவதற்காக இந்தியாவில் ஒரு சிறந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது எனுறும் பிரதமர் கூறினார்.

வரும் 2030-க்குள் சீரழிந்த 2புள்ளி 6 கோடி ஹெக்டேர் நிலங்களை மீட்டு மறுசீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளதாகவும்  மேலும், வளரும் நாடுகளில் சீரழிந்த நிலங்களை மீட்டெடுக்கவும், அவர்களுக்கு உதவவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.