தவறாக பயன்படுத்தப்படும் தேசத்துரோக வழக்குகள்... உச்சநீதிமன்றம் அதிருப்தி...

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்கு இன்னும் நடைமுறையில் இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தவறாக பயன்படுத்தப்படும் தேசத்துரோக வழக்குகள்... உச்சநீதிமன்றம் அதிருப்தி...

அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்களை, தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 124 ஏ பிரிவை எதிர்த்து, ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி வெம்போத் கரே என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆங்கிலேயர் ஆட்சியில் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு தேசத் துரோக சட்டம் கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டியது. சுதந்திரப் போராட்ட வீரர்களான காந்தி, திலகர் போன்றோர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த சட்டம் தேவையா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தேசத்துரோக வழக்கு தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.