மக்களை முட்டாளுக்குகிறாரா மம்தா பானர்ஜி...புகார் கடிதம் எழுதிய சுவேந்து அதிகாரி!!

மக்களை முட்டாளுக்குகிறாரா மம்தா பானர்ஜி...புகார் கடிதம் எழுதிய சுவேந்து அதிகாரி!!
Published on
Updated on
1 min read

மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி மீது புகார் தெரிவித்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

விளம்பரம்:

மேற்கு வங்காளத்தில் பண்டிகைத் திட்டங்கள் என்ற பெயரில் மம்தா பானர்ஜி திட்டங்களைத் தொடங்கியுள்ளார்.  அதற்காக சுவேந்து அதிகாரி அவரை விமர்சித்து வருகிறார்.  அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சுவேந்து அதிகாரி, 'மேற்கு வங்க அரசு உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.  இந்த விளம்பரத்தின் நகலும் இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

உணவு துணைத்திட்டம்:

மேலும் “இந்த விளம்பரத்தில், அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் மாநில முன்னுரிமை ரேஷன்  கார்டுதாரர்களுக்கு 23 செப்டம்பர் 2022 முதல் அக்டோபர் 30, 2022 வரை உத்சவ் திட்டத்தின் கீழ் ரேஷன் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  துர்கா பூஜை, காளி பூஜை, தீபாவளி மற்றும் சத் பூஜையை முன்னிட்டு, மேற்கு வங்க அரசு ரேஷன் மற்றும் உணவு  துணைத்திட்டம் என்ற பெயரில் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.” என எழுதியுள்ளார்.

குற்றச்சாட்டு என்ன?:

இது குறித்து சுவேந்து அதிகாரி கூறுகையில், ”துவாரம் ரேஷன் திட்டம் துவக்கம் முதலே சர்ச்சையில் உள்ளது. இதற்கு ரேஷன் வியாபாரிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இத்திட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதே சமயம் உணவுத் துணைத் திட்டம் என்பது மம்தா அரசு பெயரை மாற்றி நடத்தும் திட்டமே தவிர வேறில்லை. மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மாற்றி மம்தா பானர்ஜி வங்காள மக்களை முட்டாளாக்குகிறார்” என்று சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.  உணவு துணைத் திட்டம் என்பது புதிய பெயர் சூட்டப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா தவிர வேறில்லை எனத் தெரிவித்துள்ளார்.

                                                                                                                            -நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com