கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் பெரிய மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக டெல்லி செல்லும் அவர், பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு கட்சி மேலிடம் அனுமதி அளித்தால், அது குறித்து அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் பொம்மை.
ராஜ்ய ஜன் சங்கல்ப் யாத்திரை நடத்தப்படும் நேரத்தில் பொம்மையின் அறிக்கை வெளியாகியுள்ளது. ஜன் சங்கல்ப் யாத்திரையை கர்நாடக அரசு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கியது.
காங்கிரஸின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு எதிராக இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜன் சங்கல்ப் யாத்ராவின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் சில பேரணிகள் மற்றும் கட்சிக் கூட்டங்களுக்கு பாஜக ஏற்பாடு செய்யும் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.