முஸ்லீம்களின் அடையாளங்களை அழிக்கிறதா பாஜக?!! கண்டனம் தெரிவித்த ஒவைசி!!

முஸ்லீம்களின் அடையாளங்களை அழிக்கிறதா பாஜக?!! கண்டனம் தெரிவித்த ஒவைசி!!

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன்  பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக முஸ்லீம்களின் அடையாளத்தை அழித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மதச்சார்பற்ற சக்திகளை ஆதரிக்கும் முஸ்லீம்கள்:

செய்தியாளர்களிடம் பேசிய சவுகத் அலி, ”பாஜகவை தோற்கடிக்க முஸ்லிம்கள் எப்போதும் "மதச்சார்பற்ற சக்திகளை" ஆதரித்துள்ளனர். மக்கள் தற்போது AIMIM ஐ நோக்கி வருகிறார்கள். கிழக்கு உ. பி., பூர்வாஞ்சல், மத்திய உ. பி., பண்டேல்கண்ட் ஆகிய பகுதிகளில் தேர்தலில் போட்டியிட உள்ளோம். 2017 தேர்தலில், பாஜக ஊடகங்கள் மூலம் வாக்காளர்களை அதன் பக்கம் இழுத்தது. சமாஜ்வாதி கட்சியால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று முஸ்லிம்கள் நினைத்தனர். சுதந்திரம் பெற்றதில் இருந்து, பாஜகவை தோற்கடிக்க முஸ்லிம்கள் எப்போதும் மதச்சார்பற்ற சக்திகளை ஆதரித்து வருகின்றனர்.” எனவும் கூறியுள்ளார் சவுகத் அலி.

முஸ்லிம்களுக்கு வசதிகள் கிடைக்கவில்லை:

ஏஐஎம்ஐஎம் கட்சியின் மாநிலத் தலைவர் ஓவைசி, இந்து-முஸ்லிம் பிரச்னைகளை பேசி பிரிவினையை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார் சவுகத் அலி.  முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பாஜக அரசு எந்த வசதியும் செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சவுகத் அலி கூறுகையில், உ. பி.யில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் வங்கிகள் எதுவும் இல்லை. இப்பகுதிகளில் பள்ளிகள் இல்லை, முறையான மருத்துவமனைகள்  இல்லை. இதற்கெல்லாம் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

வெறும் வெற்று பேச்சு:

பிரதமர் நரேந்திர மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்ற வார்த்தைகள் வெறும் வெற்றுப் பேச்சு என்று ஒவைசி கூறியுள்ளார்.  இந்தியாவின் பன்முகத்தன்மையையும் முஸ்லிம்களின் அடையாளத்தையும் அழிப்பதே பாஜகவின் உண்மையான செயல்திட்டம் என தெரிவித்துள்ளார் ஒவைசி. 

ஏஐஎம்ஐஎம் எம் பிக்கள் உத்தர பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடையே தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றனர் எனவும் ஒவைசியின் கட்சி எதிர்காலத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்று AIMIM மாநிலத் தலைவர் சவுகத் அலி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சமாஜ்வாதி கட்சியின் பல தலைவர்கள் AIMIM அசாதுதீன் ஒவைசி தலைமையிலான கட்சியில் சேருவார்கள் என்றும் அலி கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   கார்கேவின் அரசியல் பயணமும் அவர் முன் உள்ள நான்கு முக்கிய சவால்களும்...!!!