அமா்நாத் யாத்திரை தொடங்கப்பட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

அமா்நாத் யாத்திரை வரும் 30 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமா்நாத் யாத்திரை தொடங்கப்பட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை நடைபெறுகிறது.

தெற்கு காஷ்மீாின் பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு வழிகளில் யாத்திரை தொடங்க உள்ளது. இந்நிலையில், அமா்நாத் யாத்திரைக்காக ஜம்மு நகா் முழுவதும் 5 ஆயிரம் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாத்திரையில் பங்குபெறும் பக்தா்கள் தங்கும் முகாம்களில் போதிய அளவு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் யாத்திரீகர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.