பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சினையில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அரசியலமைப்புச் சட்ட விதிகளை புறக்கணிப்பவர்கள்.
அதிகரிக்கும் மோதல்:
நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் கொலிஜியம் செயல்முறை தொடர்பாக மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, கொலிஜியத்தில் அரசின் பிரதிநிதியை சேர்க்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார். தற்போது மீண்டும் ஒருமுறை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் பேட்டியின் வீடியோவைப் பகிர்ந்து உச்ச நீதிமன்ற கொலீஜியத்தை கிண்டல் செய்துள்ளார்.
வீடியோவில்...:
உண்மையில், சட்ட அமைச்சர் பகிர்ந்த வீடியோவில், நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்து உச்ச நீதிமன்றமே அரசியல் சாசனத்தை 'ஹைஜாக்' செய்துவிட்டது என்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளார். இந்த நேர்காணலைப் பகிர்வதன் மூலம், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதியின் (ஓய்வு) கருத்துகளை ஆதரிக்குமாறு சட்ட அமைச்சர் ஆதரவு கோரியுள்ளார்.
வீடியோவுடன் பதிவு:
வீடியோவுடன் தனது கருத்துகளையும் பதிவிட்டுள்ளார் கிரண் ரிஜ்ஜூ. “இது ஒரு நீதிபதியின் குரல். பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சினையில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் அரசியலமைப்புச் சட்ட விதிகளை புறக்கணிப்பவர்கள்.” என பதிவிட்டுள்ளார்.
உண்மையான அழகு:
இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அழகு அதன் வெற்றிதான் என்று சட்ட அமைச்சர் ட்வீட் செய்துள்ளார். மேலும் மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் தங்களை ஆளுகிறார்கள் எனவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு சட்டங்களை உருவாக்குகிறார்கள் எனவும் கூறியுள்ளார். அதனோடு நமது நீதித்துறை சுதந்திரமானது எனவும் நமது அரசியலமைப்பு மிக உயர்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
கேள்வியெழுப்பிய ரிஜ்ஜூ:
நீபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அநியாயமானது என்று கிரண் ரிஜிஜு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-நப்பசலையார்