மலை உச்சியிலும் சுதந்திர தின கொண்டாட்டம்..!

மலை உச்சியிலும் சுதந்திர தின கொண்டாட்டம்..!

மலை உச்சியில் தேசிய கொடி ஏந்தி சுதந்திர தினத்தைக் கொண்டாடினர் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையினர்.

சுதந்திர தினவிழா கொண்டாட்டம்:

நாடு முழுவதும் 76வது சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விடுதலையின் மகத்துவத்தை பறைசாற்றும் வகையில் அனைத்து தரப்பினரும் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மலை உச்சியில் ஏந்திய தேசிய கொடி:

நாட்டின் 76 வது சுதந்திரதினத்தை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையினர், 17 ஆயித்து 500 அடி உயர மலையின் உச்சியில், தேசியக் கொடியை ஏந்தியபடி சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.

 

தேசிய கொடி அணிவகுப்பு:

இதேபோல், சிக்கிம் மாநிலத்திலும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையினர் 18 ஆயிரத்து 800 அடி உயர மலையில், தேசியக் கொடியுடன் அணி வகுத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.