தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சித்தோல்வி!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித்தோல்வி அடைந்தார்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சித்தோல்வி!

பாங்காக்கில்  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த அரை இறுதி போட்டியில், சீன வீராங்கனை ’சென் யூ பெய்’ மற்றும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இருவரும் நேருக்கு நேர் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சீன வீராங்கனை ’சென் யூ பெய்’ ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதனையடுத்து ஆட்ட இறுதியில்  21-17, 21-16 என்ற நேர்செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.