விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக தெரிவிப்பு...!

விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக தெரிவிப்பு...!

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும், இந்தியாவின் ஆதரவு குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.