உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த இந்தியா!!யார் அந்த இந்தியர்?

உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த இந்தியா!!யார் அந்த இந்தியர்?

ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலின் படி எலோன் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக கௌதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கடுமையான போட்டி:

இந்தியாவின் தொழிலதிபதிரான கௌதம் அதானிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட்டுக்கும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்காக கடுமையான போட்டி கடந்த ஒரு வாரமாக நிலவியது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் இரண்டாவது இடத்தை கௌதம் அதானி பெற்றுள்ளார்.

நிகர சொத்து மதிப்பு:

கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.15470 கோடி.  பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு ரூ.15380 கோடி.  பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு ரூ.27350 கோடி.  அதே போல, அமேசன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸின் நிகர சொத்து மதிப்பு ரூ.14970 கோடி.

அதிகரித்து வந்த சொத்து மதிப்பு:

அதானி குழுமத்தின் நிகர சொத்து மதிப்பு இந்த ஆண்டு முதல் தொடர்ந்து  அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.490 கோடி அதிகரித்துள்ளது.  இந்த ஆண்டு ஜனவரி முதல் அதானியின் சொத்து மதிப்பு ரூ.6090 கோடி அதிகரித்துள்ளது.

இரண்டாமிடம் பிடித்தது எப்படி?

மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸின் நன்கொடை செயல்பாடுகளால் அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1170 கோடியாக குறைந்துள்ளது.

இதையும் படிக்க: இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடையா?!!