கொரோனா 2-வது அலைக்கு இந்தியா தயாராக இல்லை- ஒப்புக்கொண்ட அமித்ஷா!

கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்துவது என்பது மனிதர்களால் சாத்தியமற்றது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கொரோனா 2-வது அலைக்கு  இந்தியா தயாராக இல்லை- ஒப்புக்கொண்ட அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் சென்று பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்து வருகிறார். இதனிடையே மக்களை சந்தித்தும் அவர்களுடன் உரையாடினார். 

நேற்று அவர் காந்திநகரில் கொரோனா தயார் நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது மத்திய அரசு 2வது அலைக்கு தயாராக இருக்கவில்லை என ஒப்புக்கொண்டார்.  ஆனால் 2வது அலையை கட்டுப்படுத்துவது என்பது மனிதர்களால் சாத்தியமற்றது என குறிப்பிட்ட அவர், தொற்று பரவிய ஒரு வார காலக்கட்டத்தில் கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் 10 மடங்கு ஆக்சிஜன் சப்ளை இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்ததாக  தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது இந்த மோசமான சூழலில், நாட்டு மக்கள் நெருக்கமான ஏராளமானோரை இழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். எனவே வரும் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே மிகப்பெரிய ஆயுதம் என்பதால், மக்கள் எவ்வித அச்சமின்றி அதனை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவலால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில் 2வது அலையில் மட்டும் இரண்டுலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.