எரிபொருள் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கும் இந்தியா...R-U போரால் அதிக விலை கொடுக்கவேண்டிய அவலநிலை!!

இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு பெரும்பாலும் இறக்குமதியையே நம்பியுள்ள நிலையில் உக்ரைன் ரஷ்யா போரால் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எரிபொருள் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கும் இந்தியா...R-U போரால் அதிக விலை கொடுக்கவேண்டிய  அவலநிலை!!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. ரஷ்யா-வில் இருந்து பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் தங்களின் எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவையே நம்பியுள்ளன. இந்த நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. 

ஆனால் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வழிவகுக்கும் வகையிலேயே அமெரிக்காவின் பொருளாதார தடைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு ஐரோப்பா பணம் செலுத்தும் வகையில் ரஷ்ய வங்கிகள் SWIFT இலிருந்து விலக்கப்படவில்லை.  

இந்தியாவை பொறுத்தவரை நாட்டின் ஒரு நாள் தேவையான 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்-யில் 85 சதவீதம் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் குறிப்பாக  ஈராக்-ல் இருந்து 23 சதவீதமும், சவுதி அரேபியா-வில் இருந்து 18 சதவீதமும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 11 சதவீதமும், மேலும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் இருந்து இந்தியா 7.3 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில் நடப்பாண்டில் இது 11 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் உக்ரைன் ரஷ்யா போரால் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.