இந்தியா தற்போது பேரழிவிற்கு உள்ளாகியிருக்கிறது.... ட்ரம்ப்

கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியா தற்போது பேரழிவிற்கு உள்ளாகியிருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா தற்போது பேரழிவிற்கு உள்ளாகியிருக்கிறது....  ட்ரம்ப்

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், உலகளாவிய கொரோனா பரவலுக்கு காரணமாக சீனா அமெரிக்காவுக்கு நஷ்ட ஈடாக 10 டிரில்லியன் டாலர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சொல்ல போனால் உலகளாவிய பேரழிவுக்கு ஈடாக சீனா இதைவிடமாபெரும் தொகையை வழங்க வேண்டும் என கூறிய அவர், சீனாவால் அவ்வளவு பெரிய தொகை செலுத்த இயலாது எனவும் கூறினார்.

வைரஸ் பரவியது விபத்தோ, தற்செயலானதோ எதுவாக இருந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மாபெரும் பேரிழப்புக்கு உள்ளாகியிருப்பதாக அதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியா தற்போது பேரழிவிற்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டார்.